யூரோ கால்பந்து காலிறுதியில் செக் குடியரசு - டென்மார்க் மோதல்;மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - உக்ரைன் அணிகள் பலப்பரீட்சை
யூரோ கால்பந்து தொடர் காலிறுதி சுற்றில் இன்று செக் குடியரசு, டென்மார்க் அணியையும், இங்கிலாந்து, உக்ரைன் அணியையும் எதிர்கொள்ள உள்ளன.
நேற்று தொடங்கிய காலிறுதி சுற்றில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் வெற்றி பெற்ற நிலையில் இன்று இரவு அஜர்பைஜானில் நடக்கும் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசு, டென்மார்க் அணியுடன் மோதுகிறது.
நள்ளிரவு பன்னிரெண்டரை மணிக்கு ரோம் நகரில் தொடங்கும் மற்றொரு போட்டியில் பலம் பொருந்திய இங்கிலாந்து அணி உக்ரைனை எதிர் கொள்கிறது. இந்த இரு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் அரை இறுதியில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும்.
Comments