நடுக்கடலுக்கு மத்தியில் எரிமலை வெடிப்பை போன்று ஏற்பட்ட தீ பிளம்பு

0 6256
நடுக்கடலுக்கு மத்தியில் எரிமலை வெடிப்பை போன்று ஏற்பட்ட தீ பிளம்பு

மெக்சிகோ வளைகுடாவில் கடலுக்கடியில் செல்லும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால், எரிமலை வெடிப்பை போன்று தீப்பிழம்பு சீறிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

அரசுக்கு சொந்தமான பெமெக்ஸ் ( Pemex) என்ற எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான குழாயில் ஏற்பட்ட கசிவால் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கடற்படை மற்றும் தீயணைப்பு படையினர் 5 மணி நேர போராட்டத்துக்கு பின் நைட்ரஜனை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக பெமெக்ஸ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments