பொதுத்துறையின் இரண்டாவது பெரிய வங்கியானது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி..!
பஞ்சாப் நேசனல் வங்கி, பரோடா வங்கி ஆகியவற்றை முந்தி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொதுத்துறையின் இரண்டாவது பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பங்கு மதிப்பு கடந்த ஒரு மாதத்தில் 57 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் பஞ்சாப் நேசனல் வங்கியின் பங்கு மதிப்பு 4 விழுக்காடும், பரோடா வங்கியின் பங்கு மதிப்பு 5 விழுக்காடும் குறைந்துள்ளன.
நேற்று மாலை நிலவரப்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சந்தை மூலதனம் 51 ஆயிரத்து 887 கோடி ரூபாயாக உள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கி, பரோடா வங்கி ஆகியவற்றின் சந்தை மூலதனம் ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்குக் குறைவாக உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது குறிப்பிடத் தக்கது.
Comments