கொரோனா இறப்புத் தொடர்பாகத் திருத்தம் செய்ய அரசு மருத்துவமனைகளை அணுகலாம்..! -ராதாகிருஷ்ணன்

0 4339

கொரோனா இறப்பு தொடர்பாகத் திருத்தம் செய்ய விரும்பினால் முறையான ஆவணங்களுடன் தொடர்புடைய அரசு மருத்துவமனைகளை அணுகலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா புறநோயாளிகள் பிரிவு, கட்டுப்பாட்டு மையம், இறப்புச் சான்றிதழ் திருத்தும் மையம், படுக்கை வசதிகள் ஆகியவற்றை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகளைக் குறைத்துக் காட்டவில்லை எனத் தெரிவித்தார்.

தளர்வுகள் தொடர வேண்டுமென்றால் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பொதுமக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சந்தைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments