தமிழகத்தில் முதன்முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..!
மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து, தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு நேற்று அனுமதி அளித்தது.
கோவின் இணையதளத்தில் பதிவு செய்தோ அல்லது அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்கு நேரடியாக சென்றோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இதனை கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
Comments