”கோவாக்சின் தடுப்பூசி தீவிரமான நோய்த் தொற்றுக்கு எதிராக 93.4 சதவீதம் பலன்” -3வது கட்டப் பரிசோதனையில் தகவல்
கோவேக்சின், தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் கொரோனாவுக்கு எதிராக 93.4 சதவீத தடுப்புத் திறனையும், டெல்டா வகைகளுக்கு எதிராக 65.2 சதவீத தடுப்புத் திறனையும் வெளிப்படுத்துவதாக கூறியுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், தடுப்பூசி ஒட்டுமொத்தத்தில் 77.8 சதவீத அளவிற்கு திறன் கொண்டது என தெரிவித்துள்ளது.
கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வுகள் நாடு முழுவதும் 25 மருத்துவமனைகளில் 18 முதல் 98 வயது வரையிலான, 25 ஆயிரத்து 800 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் திறன் குறித்து இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பரிசோதனை எனக் கூறியுள்ள அந்நிறுவனம், மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடிய கொரோனாவுக்கு எதிராக 77.8 சதவீத தடுப்புத் திறன் கொண்டது. அறிகுறிகள் ஏற்படுத்தாத கொரோனாவுக்கு எதிராக 63 சதவீத தடுப்புத் திறனையும், லேசான, மிதமான பாதிப்பு ஏற்படுத்தும் கொரோனாவுக்கு எதிராக 78 சதவீதமும், டெல்டா வகைகளுக்கு எதிராக 65 சதவீதமும் தடுப்புத் திறன் கொண்டது.
Comments