ஜெனரல் மோட்டார் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா நிறுவனத்துடன் இணைந்து லித்தியம் ஆலையில் முதலீடு
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா நிறுவனத்துடன் லித்தியம் ஆலை அமைக்க பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
முதன் முறையாக ஒரு மோட்டார் வாகன நிறுவனம் தனது உற்பத்தியான கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களை மின்மயமாக்குவதற்கு தேவையான பாட்டரிகளை தானே உற்பத்தி செய்வதற்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
முன்பு சீனாவின் கிரேட் வால் மோட்டார் கம்பெனி போன்ற சில நிறுவனங்களும் லித்தியம் திட்டங்களுக்கு முதலீடுகள் செய்த போதும் இத்தனை பெரிய உற்பத்தித் திட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் மேலும் பல மோட்டார் கம்பெனிகள் இதே போன்ற பங்குதாரர்களாக பேட்டரிக்குத் தேவையான ரசாயனத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments