பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளே தீர்மானிக்க சட்டத்திருத்தம்; சட்ட அமைச்சகத்துடன் ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் விளக்கம்
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளே முடிவு செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெஹலோட் தெரிவித்துள்ளார்.
மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக அளித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளின் அதிகாரத்தை மீட்பதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வரப்படலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்ட அமைச்சகம் ஆலோசித்து வருவதாகவும் பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டலுக்கு ஏற்ப எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கெஹலாட் தெரிவித்துள்ளார்.
Comments