உத்தரகாண்ட் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தீரத் சிங் ராவத்
உத்தரகாண்ட் முதல் அமைச்சர் தீரத் சிங் ராவத் ஆளுநரை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். அவர் டேராடூனில் உள்ள ராஜ் பவனில் ஆளுநர் பேபி ராணி மவுரியாவை நேற்றிரவு நேரில் சந்தித்து பேசினார்.
ராவத்தின் திடீர் ராஜினாமா கட்சியினரிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 2021 மார்ச் 10 அன்று தீரத் சிங் ராவத் மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக பதவியேற்றார். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர்கள் பலர் தீரத் சிங் ராவத் மீது அதிருப்தியில் இருந்ததால், கட்சி உயர்மட்டக்குழு அவரை டெல்லிக்கு அழைத்திருந்தது.
பாஜக கட்சியின் தேசியத் லைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்த பின்னர் ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments