இந்தியன் 2 படம் தொடர்பாக லைகா தொடர்ந்த இடைக்கால வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

0 4373
இந்தியன் 2 படம் தொடர்பாக லைகா தொடர்ந்த இடைக்கால வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க, இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த இடைக்கால வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாக தெரிவிக்கபட்டது.

இயக்குனர் ஷங்கர் தரப்பில், படப்பிடிப்புக்கு அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாக தெரிவிக்கபட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதீஷ்குமார், லைகா தொடர்ந்த இடைக்கால வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments