கொரோனா இறப்பு சான்றிதழ்களில் தவறு இருந்தால் சரி செய்ய வேண்டும் - அதிமுக வலியுறுத்தல்
கொரோனா இறப்புச் சான்றிதழ்களில் தவறு இருந்தால் அதை நிவர்த்தி செய்து, பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களும் நிவாரணம் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீட்டை அளிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஐசிஎம்ஆர் வழிமுறைகளின்படி, இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்வதும், கொரோனாவால் உயிரிழந்த அனைத்துக் குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடைவதைக் கண்காணிப்பதும் தமிழக அரசின் கடமை என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
Comments