டிஜிட்டல் மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றுவதே தமிழக அரசின் இலக்கு - அமைச்சர் செந்தில்பாலாஜி

0 4425

தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் டிஜிட்டல் மின் அளவீட்டுக் கருவியை ஸ்மார்ட் கருவியாக மாற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் இலக்கு என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் மின் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, உற்பத்தியாகும் மின்சாரத்துக்கும் விநியோகம் செய்யப்படும் மின்சாரத்துக்கும் இடையே வித்தியாசம் காணப்படுவதால், மின்வாரியத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments