மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தொலைத் தொடர்புத்துறை -பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்
தொலைத்தொடர்புத்துறை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், சேவை கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
5 ஜி சேவையை தொடங்கி இந்தியாவின் டிஜிட்டல் கனவை நிறைவேற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
ஜியோ வருவதற்கு முன் தனி நபர் மூலம் சராசரியாக 220 முதல் 230 ரூபாய் வருவாய் கிடைத்ததாக கூறிய மிட்டல், தற்போது இது 130 ரூபாயாக குறைந்து விட்டதாக தெரிவித்தார்.
கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் தயங்காது என்று குறிப்பிட்ட மிட்டல், ஆனால் அது ஒரு தலைப்பட்சமாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
Comments