முன்னாள் அமைச்சர் உறவினர்கள் ஆக்கிரமித்த கோவில் நிலம்... இடித்து அகற்றிய அதிகாரிகள்

0 5635

சிவகங்கை காமராஜர் காலனி அருகே கெளரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 148 ஏக்கர் நிலத்தில் 11 ஏக்கர் நிலத்தினை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டிவருவதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சம்மந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றுமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் கட்டிடங்களைத் தாமே முன்வந்து இடித்துக்கொள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்து அறநிலையத்துறை நோட்டீஸ் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவகாசத் தேதியான ஜூன் 30 ஆம் தேதி முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆன நிலையிலும் கட்டிடத்தை இடிக்க ஆக்கிரமிப்பாளர்கள் முன்வரவில்லை.

இதனையடுத்து அறநிலையத்துறை சார்பிலேயே 3 ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு ஏற்கனவே கட்டியிருந்த கட்டிடங்கள், கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடங்கள் உள்ளிட்டவை இடித்து அகற்றப்பட்டன.

கட்டிடங்களை இடிக்கும் பணியின்போது அசம்பாவிதங்கள் நேராமல் இருக்க, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வீடுகள் இடிக்கப்படுவதைப் பார்த்து, அங்கு ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியவர்கள் கதறி அழுதனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments