பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு வருவோர் கொரோனா பரிசோதனை சான்றுடன் வரவேண்டும் அம்மாநில அரசு அவசர உத்தரவு
கர்நாடக மாநிலத்திற்குள் விமானம், ரயில், பேருந்து டாக்சி போன்றவற்றில் வரும் யாரும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நெகட்டிவ் RT-PCR சான்றிதழுடன் வர வேண்டும் என்று அம்மாநில அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சான்று 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் இருந்து தினசரி ஏராளமானோர் கர்நாடகத்திற்கு வருகிறார்கள் இது போன்று பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து பணி நிமித்தமாக வருவோருக்கும் இது பொருந்தும் என்று எடியூரப்பா அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் இருந்து வருவோரை கண்காணிக்க தனி நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.
Comments