மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் ரூ.65 கோடி சொத்துகள் முடக்கம்
மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய 65 கோடி ரூபாய் மதிப்பிலான சர்க்கரை ஆலை சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில், 2007 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், கடன் வழங்கியது உள்ளிட்ட விவகாரங்களில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கடந்த 2019-ம் ஆண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக அஜித் பவார், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை சத்தாரா மாவட்டத்தில் உள்ள 65 கோடி ரூபாய் மதிப்பிலான சர்க்கரை ஆலையின் சொத்துகளை முடக்கி உள்ளனர்.
Comments