காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம்

0 3123
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம்

ம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் விடிய விடிய நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

புல்வாமா மாவட்டத்தின் ராஜ்போரா பகுதியில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்த போது தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இந்த மோதலில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் பலத்த காயமடைந்த காஷி என்ற வீரர் மருத்துவமனையில்உயிரிழந்தார்.

ஜம்முவில் உள்ள கோவில்களில் வெடிகுண்டு வைக்க லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியது முறியடிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments