கோவிட் 19 நோயின் 2ஆவது பேரலையால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தகவல்
கோவிட் 19 நோயின் இரண்டாவது பேரலையால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் தொடர்ந்த மத்திய அரசின் உறுதியான நிதிக் கொள்கையின் ஆதரவு காரணமாக பொருளாதார நிலைமை மீண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி நேற்று 23 வது நிதி ஸ்திரத்தன்மை தொடர்பான அறிக்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் மும்பையில் தாக்கல் செய்து செய்தியாளர்களிடம் பேசினார்.
எதிர்பார்த்ததைவிடவும் குறைவாகத்தான் வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்களில் பாதிப்பு நிகழ்ந்திருப்பதாக அவர் கூறினார். வங்கிகளின் வாராக்கடன் சுமை சுமார் ஏழரை சதவீதம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
சிறுகுறுந்தொழில்களுக்கான கடன்கள் வழங்குவதில் வாராக் கடன்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் வங்கிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments