மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் 20 சதவீதம் செலவுகளைக் குறைக்க நிதியமைச்சகம் உத்தரவு
மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் 20 சதவீதம் செலவுகளைக் குறைக்க நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரம், உள்ளிட்ட 16 அத்தியாவசிய அமைச்சகங்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் போன்ற பிரச்சினைகளால் அனாவசியமான மற்றும் ஆடம்பரமான செலவுகளைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
85 அமைச்சகங்கள் மற்றும் அதன் துறைகளுக்கு செலவைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
Comments