12-18 வயது சிறார்களுக்கு சைடஸ் கெடில்லா தடுப்பூசிக்கு அனுமதியளிக்க கோரிக்கை
பெங்களூருவைச் சேர்ந்த சைடஸ் கெடில்லா மருந்து நிறுவனம், 12 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு செலுத்தக் கூடிய சைகோவ்-டி (ZyCoV-D) என்ற தடுப்பூசியை தயார்நிலையில் வைத்துள்ளது.
இந்த தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், அவசரப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கக் கோரி, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிஜிசிஐ) இந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கோவிட்19 நோய்க்கு எதிராக 4 தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதியளித்து உள்ளது. இதன்படி, கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக்-வி, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
சைடஸ் கெடில்லாவுக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் இந்தியாவில் 5வது தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரும். அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது தடுப்பூசி என்ற பெருமையும், முதல் டி.என்.ஏ. வகை தடுப்பூசி என்ற பெருமையும் கெடில்லா நிறுவனத்துக்கு கிடைக்கும்.ஜைடஸ் கெடில்லா நிறுவனத்தின் சைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது.
முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28வது நாளில் 2வது டோசும், 56வது நாளில் 3வது டோஸ் செலுத்த வேண்டும். இதை ஊசி மூலம் செலுத்தாமல் தோல் பகுதியில், மின்முனை மூலம் இது செலுத்தப்படும்.
Comments