சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் எரிந்த நிலையில் தற்காலிக பணியாளர் சடலம் மீட்பு : தற்கொலை கடிதம் குறித்து மாணவரின் குடும்ப நண்பர் புதிய தகவல்

0 5659
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் எரிந்த நிலையில் மாணவர் சடலம் மீட்பு

சென்னை ஐஐடியில், கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று ஹாக்கி விளையாட்டு மைதானத்திற்கு வீரர்களுடன் வந்த பயிற்சியாளர் ராஜு என்பவர், மைதானத்தில் பாதி எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரது சடலம் கிடப்பதாக தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

சடலமாகக் கிடந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பதும், கேரளாவில் பி.டெக் முடித்த அவர், ஐஐடியில் ஆய்வு படிப்புடன், ப்ராஜெக்ட் அசோசியேட்டாக தற்காலிகமாக பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேளச்சேரியில் உன்னி கிருஷ்ணன் நண்பர்களுடன் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போலீசார் தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், மாணவரின் சடலத்தை பெற்றுக் கொள்ள வந்த தந்தையிடமும் போலீசார் விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவனின் குடும்ப நண்பர், கடிதத்தில்  சந்தேகப்படும் வகையில் எதுவுமில்லை, ஆனால், காரணமும் புரியவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments