சென்னை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் 4வது நபரை ஹரியானாவில் கைது செய்த தனிப்படை போலீசார்

0 2980
சென்னை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் 4வது நபரை ஹரியானாவில் கைது செய்த தனிப்படை போலீசார்

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கில் கொள்ளையடிப்பதற்கு திட்டத்தை வகுத்து கொடுத்த முக்கியமான நபரான 4ஆவது கொள்ளையன் சவுகத் அலியை சென்னை தனிப்படை போலீசார் ஹரியானாவில் வைத்து கைது செய்துள்ளனர்.

சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களில் நூதன முறையில் லட்சக்கணக்கிலான பணத்தை ஹரியானா கும்பல் கொள்ளை அடித்தது. தப்பி ஓடி ஹரியானாவில் பதுங்கிய திருடர்களை, தனிப்படை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 4ஆவதாக மேலும் ஒரு கொள்ளையன் போலீசாரிடம் சிக்கியுள்ளான்.பரிதாபாத் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த சவுகத் அலி என்பவனை தனிப்படை போலீசார் கைது செய்து விமானம் மூலம் இன்று சென்னை அழைத்து வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments