அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசி இறக்குமதியை அனுமதிக்க லஞ்சம் கேட்பதாக புகார்
பிரேசிலில் அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதிக்க, அங்குள்ள போல்சொனாரே அரசு ஒரு டோசுக்கு ஒரு டாலர் வீதம் லஞ்சம் கேட்டதாக, புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் கோவேக்சினை பெற பிரேசில் அரசு ஏற்கெனவே ஒப்பந்தம் போட்ட நிலையில், அதில் முறைகேடு புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், அஸ்ட்ராஜெனேக்கா நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகளை பிரேசிலில் தனியார் நிறுவனம் இறக்குமதி செய்ய முயற்சித்ததாகவும், அதை அனுமதிப்பதற்கு பிரேசில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு தற்போது தடுப்பூசியை விற்பதில்லை என்றும், இந்த நிலையில் லஞ்சக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் ஆஸ்ட்ராஜெனேக்கா விளக்கம் அளித்துள்ளது.
Comments