கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களை அனுமதிக்க சுவிட்சர்லாந்து அரசு ஒப்புதல்
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என இந்தியா கோரியதை சுவிட்சர்லாந்தும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருவோர் பைசர், மாடர்னா, வாக்சர்விரியா, ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றைப் போட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் தான் போடப்பட்டு வருவதால் இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் நாட்டுக்குள் அனுமதிக்கும்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை இந்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதையடுத்து சுவிட்சர்லாந்தும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆஸ்திரியா, ஜெர்மனி, சுலோவேனியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் உள்ளே வருவதற்கு அனுமதி அளித்துள்ளன.
Comments