அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண் நியமனம்..!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாலினா என்கிற பெண்ணை அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க ஜோ பைடன் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
சாலினா என்கிற பெண் பத்தாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின் 2007ஆம் ஆண்டு முதல் சர்க்கியூட் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். 2018 முதல் அந்த நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் சாலினாவை மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பெடரல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாகத் தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
Comments