ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு வல்லுநர் குழு அனுமதி மறுப்பு
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனத்திற்கு, வல்லுநர் குழு அனுமதி மறுத்துள்ளது.
2 டோஸ்கள் போட்டுக் கொள்ளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஒரு டோஸ் மட்டும் போட்டுக் கொள்ளும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி டாக்டர் ரெட்டீஸ் விண்ணப்பித்த நிலையில், அதை வல்லுநர் குழு ஆய்வு செய்தது.
ஒரு டோஸ் தடுப்பூசி பெரிய அளவில் திறன் கொண்டதாக இருக்காது என்பதால், அதை அனுமதிப்பதில் அர்த்தமில்லை என்ற அடிப்படையில், வல்லுநர் குழு அனுமதி மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments