பொது வருங்கால வைப்பு நிதி, தேசியச் சேமிப்புப் பத்திர திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - இந்திய நிதியமைச்சகம் அறிவிப்பு
பொது வருங்கால வைப்பு நிதி, தேசியச் சேமிப்புப் பத்திரம், அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அரசு அறிவித்துள்ளது.
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதிக்கு ஏழு புள்ளி ஒரு விழுக்காடும், தேசியச் சேமிப்புப் பத்திரத்துக்கு 6 புள்ளி 8 விழுக்காடும் என இப்போதுள்ள அதே வட்டி விகிதம் நீடிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
அஞ்சலக மாத வருமானத் திட்டக் கணக்கில் உள்ள தொகைக்கு 6 புள்ளி 6 விழுக்காடும், சேமிப்புக் கணக்குக்கு 4 விழுக்காடும் வட்டி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சேமிப்புக் கணக்குக்கு பாரத ஸ்டேட் வங்கியில் 2 புள்ளி 7 விழுக்காடும், ஐசிஐசிஐ வங்கியில் 3 விழுக்காடும், கோட்டக் மகிந்திரா வங்கியில் மூன்றரை விழுக்காடும் தான் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.
Comments