சமூக ஊடகக் கருத்துக்களை எது சரி எது தவறு என வேறுபடுத்திப் பார்க்க இயலாது - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
சமூக ஊடகங்கள் பொதுமக்கள் கருத்தை மிகப் பெரிதாகக் காட்டுவதால் அவற்றைக் கொண்டு எது சரி எது தவறு என வேறுபடுத்திப் பார்க்க இயலாது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பொதுமக்களின் உணர்ச்சிமயமான கருத்துக்களைச் சமூக ஊடகங்கள் மிகப் பெரிதாகக் காட்டுவதாகத் தெரிவித்தார்.
அவற்றைக் கொண்டு சரி தவறு, நல்லது கெட்டது, உண்மை போலி ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்க இயலாது என்றும் குறிப்பிட்டார்.
பெரிதாக்கப்பட்ட ஓசை எப்போதும் சரியானதைக் காட்டாது என்பதை நீதிபதிகள் மனத்திற் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Comments