12 வயதுக்கும் மேற்பட்டோருக்கான சைடஸ் கெடில்லா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பம்
12 வயதுக்கும் மேற்பட்டோருக்கு பயன்படுத்தத் தக்க ZyCoV-D என்ற டிஎன்ஏ கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சைடஸ் கெடில்லா ((Zydus Cadila)) நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்த தடுப்பூசியின் மூன்று கட்ட பரிசோதனைகள் முடிந்துள்ளன. மூன்றாவது கட்டத்தில் 28 ஆயிரம் தன்னார்வலர்கள் மீது தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுமதி கொடுக்கப்பட்டால், இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 5ஆவது தடுப்பூசியாக அமையும். ஆண்டுக்கு 120 கோடி டோஸ்களை தயாரிக்க சைடஸ் கெடில்லா திட்டமிட்டுள்ளது.
Comments