கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு பயண அனுமதி வழங்க வேண்டும்: ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினைப் போட்டுக் கொண்டுவர்களுக்கு பயண அனுமதியை ஐரோப்பிய நாடுகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
அப்படி அனுமதிக்கும் நாடுகளின் பயணிகள் ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் சான்றுடன் இந்தியா வரும்போது அவர்களுக்குத் தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியன், தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளுக்கு டிஜிட்டல் கோவிட் சான்றிதழை இன்றுமுதல் வழங்குகிறது.
ஐரோப்பிய மருத்துவ ஏஜன்சியால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்தச் சான்று வழங்கப்படும். இந்த வசதியை கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினுக்கும் வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments