டெல்டா கொரோனா வைரசுக்கு எதிராக திறம்பட செயலாற்றும் கோவாக்சின்;அமெரிக்க சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

0 3964
டெல்டா கொரோனா வைரசுக்கு எதிராக திறம்பட செயலாற்றும் கோவாக்சின்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசி, ஆல்பா மற்றும் டெல்டா வகை கொரோனா தொற்றுகளுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது என அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்களின் ரத்த மாதிரிகளை வைத்து அந்த நிறுவனம் நடத்திய 2 ஆய்வு முடிவுகளில், கோவேக்சின் தடுப்பூசி உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுவதையும், கோவிட் வைரசின் உருமாற்றமடைந்த ஆல்பா, டெல்டா வைரசுகளுக்கு எதிராக ஆன்டிபாடிகளை திறம்பட உருவாக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது.

2 கட்ட ஆய்வில் வெளியிடப்பட்ட முடிவுகள் அடிப்படையில், கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவுகள் குறைவானது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments