டிராய் வெளியிட்ட என்டிஓ 2.0க்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்தது மும்பை உயர்நீதிமன்றம்
டிராய் வெளியிட்ட என்டிஓ 2.0 எனப்படும் டிவி சேனல்களுக்கான புதிய கட்டண முறைக்கு எதிராக தொலைக்காட்சி சேனல் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, கேபிள் அல்லது டிடிஎச்சில் வழங்கப்படும் பொக்கே சேவையில் இடம்பெறும் சேனல்களில் அல கார்ட்டே கட்டணமானது 12 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்கிற டிராயின் உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் பொக்கே சேவையில் வழங்கப்படும் கட்டண சேனல்களுக்கான அ ல கார்ட்டே கட்டணத்தின் மொத்த கட்டணம் பொக்கேவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை காட்டிலும் ஒன்றரை மடங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்கிற டிராயின் உத்தரவையும் மும்பை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் பொக்கே சேவையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டண சேனல்களுக்கான தனித்தனி அல கார்ட்டே விலையானது பொக்கே சேவையில் இடம்பெற்றுள்ள அதே சேனல்களின் சராசரி கட்டணத்தில் 3 மடங்கிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்கிற டிராயின் உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி, சேனல் ஏ 8 ரூபாயாகவும், சேனல் பி 10 ரூபாயாகவும், சேனல் சி 12 ரூபாயாகவும் இருக்கும் பட்சத்தில் தனித்தனியாக அல கார்ட்டேவாக இந்த சேனல்களை பார்க்க 30 ரூபாய் செலுத்த நேரிடும், ஆனால் இனி இந்த மூன்று சேனல்களையும் சேர்த்த பொக்கே கட்டணம் 20 ரூபாய்க்கு மிகாமல் மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். மேலும் என்டிஓ 2.0 எனப்படும் புதிய கட்டண முறையில் உயர்நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட அம்சங்களை அமல்படுத்துவதற்கு எதிராக 6 வாரங்களுக்கு டிராய் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
Comments