அனைத்து கிராமங்களுக்கும் பாரத்நெட் திட்டத்தில் இன்டர்நெட்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
16 மாநிலங்களில் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி அளிப்பதற்கான பாரத்நெட் சேவை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பாரத்நெட் திட்டம் இந்த கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. இதற்காக மத்திய அரசு சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும்.
தனியார் பங்களிப்புடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய ஐ.டி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களுக்கும் ஆயிரம் நாட்களுக்குள் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும் என கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி கடந்த 31 தேதி வரை ஒரு லட்சத்து 56 ஆயிரம் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Comments