தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்க முடியாது ; கோவின் இணையதளத்தில் பதிவு செய்து, ஆர்டர் செய்ய வேண்டும்
ஜூலை ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்ய முடியாது என அரசு அறிவித்துள்ளது.
தடுப்பூசி வாங்குவதற்கு கோவின் இணையதளத்தில் தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்து, தடுப்பூசிக்கு ஆர்டர் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனி, தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு தனியாக அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், இணையதளத்தில் ஆர்டர் செய்த 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments