பன்னாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்துத் தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு

0 2848
பன்னாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடையை ஜூலை 31ஆம் நாள் வரை விமானப் போக்குவரத்து இயக்ககம் நீட்டித்துள்ளது.

பன்னாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடையை ஜூலை 31ஆம் நாள் வரை விமானப் போக்குவரத்து இயக்ககம் நீட்டித்துள்ளது.

கொரோனா சூழலில் பிற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் பயணிகள் விமானங்கள் இயக்க 2020 மார்ச் 23ஆம் நாள் விதிக்கப்பட்ட தடை பல முறை நீட்டிக்கப்பட்ட பின் முடிவடைய இருந்தது. இந்தத் தடையை ஜூலை 31 வரை நீட்டித்துள்ள விமானப் போக்குவரத்து இயக்ககம், வெளிநாட்டுச் சரக்கு விமானங்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணிகள் விமானங்களை உரிய அதிகாரிகளின் அனுமதியுடன் இயக்கலாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments