பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றி ; 170 கி.மீ வேகத்தில் வானில் பறந்த ஏர்-கார்
ஸ்லோவேக்கியாவில் பறக்கும் காரின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடை பெற்றது. பேராசிரியர் Stefan Klein என்பவர் பெட்ரோலில் இயங்கும் நவீன ஏர்-காரை வடிவமைத்துள்ளார்.
பார்ப்பதற்கு பெராரி கார் போல் காட்சியளிக்கும் இந்த பறக்கும் கார் இரண்டேகால் நிமிடத்தில் விமானமாக மாறி விடும். BMW இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த Air Car மூலம் வானில் 190 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கலாம் எனக் கூறப்படுகிறது.
1000 கிலோமீட்டர் தூரம் பறக்கக் கூடிய இந்த ஏர் காரின் சோதனை ஓட்டம் ஸ்லோவாக்கியாவில் உள்ள 2 விமான நிலையங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடைபெற்றது.
2 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த ஏர் காரை தயாரிக்க பதினேழரை கோடி ரூபாய் செலவானதாக பேராசிரியர் Klein தெரிவித்துள்ளார்.
Comments