காயம் காரணமாக விம்பிள்டன் போட்டியில் இருந்து வெளியேறிய செரீனா வில்லியம்ஸ்... கண்ணீருடன் விடைபெற்ற செரீனா

0 4994

காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறிய நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.

லண்டனில் தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அலைக்சண்ட்ரா ஸஸ்னோவிச்-ஐ எதிர் கொண்ட செரீனாவுக்கு திடீரென கால் சறுக்கி காயம் ஏற்பட்டது.

முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து விளையாட முயற்சித்த செரினா, வலி அதிகமானதால் நடப்பு விம்பிள்டன் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதன் மூலம் 8-வது முறையாக விம்பிள்டன் பட்டம் வெல்லும் செரீனா வில்லியம்ஸின் கனவு தகர்ந்ததால், கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments