தமிழக காவல்துறையின் டிஜிபியாக பதவி ஏற்றார் சைலேந்திர பாபு
தமிழகக் காவல்துறையின் டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திர பாபு, பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனக் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
2019 மார்ச் முதல் ரயில்வே காவல்துறை டிஜிபியாகப் பணியாற்றி வந்த சைலேந்திர பாபு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இன்று பதவியேற்றுக்கொண்டார். முந்தைய டிஜிபி திரிபாதி அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட காவல் துறை தொடர்பான மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு முதலமைச்சருக்கு அறிக்கை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளாக டிஜிபியாகப் பணியாற்றிய திரிபாதி ஓய்வு பெற்றதையடுத்து அவரையும், அவர் மனைவியையும் காரில் அமர்ந்திருக்க அவருடன் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் வடம்பிடித்து நுழைவாயில் வரை இழுத்துச் சென்று வழியனுப்பினர். மரபுப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது இசைக்குழுவின் இசை முழங்கக் காவல்துறையினர் அணிவகுத்து நின்று வழியனுப்பினர்.
Comments