நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்?

0 6365

நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன், தற்போது சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசனும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமல் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments