முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்குக் கொலைமிரட்டல் விடுத்ததாக சசிகலா மற்றும் அடையாளம் தெரியாத 500 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

0 5220
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்குக் கொலைமிரட்டல் விடுத்ததாக சசிகலா மற்றும் அடையாளம் தெரியாத 500 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்குக் கொலைமிரட்டல் விடுத்ததாக சசிகலா மற்றும் 500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் ஜூன் 9ஆம் நாள் ரோசனை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தான் சசிகலா குறித்து ஊடகங்களில் கருத்துத் தெரிவித்த நிலையில், சசிகலாவின் அடியாட்கள் செல்பேசி, வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் மூலம் ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் செல்பேசியில் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளதுடன் அவர்கள் மீதும், அதற்குத் தூண்டுதலாக இருக்கும் சசிகலா மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

அதன் அடிப்படையில் சசிகலா மற்றும் 500 பேர் மீது, கொலைமிரட்டல் உள்ளிட்ட நான்கு  பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments