சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வலுக்கும் ஆதாரம் : சிக்கிய ”ஆபாச சேட்” ஸ்க்ரீன் ஷாட்

0 4827

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவின் மின்னஞ்சல் கணக்கை ஆய்வு செய்ததில் மாணவிகளிடம் அவர் ஆபாசமாக சேட் செய்ததும், உதவியாளரின் செல்போன் மூலம் மாணவி ஒருவருடன் வீடியோ காலில் பேசியதற்கான ஸ்க்ரீன் ஷாட்டுகள் சிக்கியுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். 

சுஷில் ஹரி பள்ளி வளாகத்தில் உள்ள சிவசங்கர் பாபாவின் சொகுசு அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார், அங்கிருந்து அவர் பயன்படுத்திய லேப்டாப், பெண்டிரைவ், பிளாப்பி டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அத்தோடு, சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மின்னஞ்சல் கணக்கை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வந்த சிவசங்கர் பாபா, இ-மெயில் மூலமாகவே ஆசிரியர்களிடமும், மாணவிகளிடம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே, மாணவி அளித்த புகாரிலும் சிவசங்கர் பாபாவை இ-மெயில் மூலம் தான் தொடர்பு கொள்ள முடியும் எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், சிவசங்கர் பாபா இ-மெயில் மூலம் மாணவிகளுக்கு ஆபாசமாக அனுப்பிய மெஜேச்சுகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுக்கு முதலில் மறுப்பு தெரிவித்த சிவசக்கர் பாபா, சேட் ஆதாரத்தை கைப்பற்றியவுடன், புகாரை ஒப்புக் கொண்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

தனது உதவியாளரின் செல்போனில் இருந்து மாணவி ஒருவருக்கு சிவசங்கர் பாபா வீடியோ காலில் பேசியதாகவும், அப்பொழுது சொகுசு அறையில் சில பெண்களுடன் நெருக்கமாக இருந்து கொண்டே சிவசங்கர் பாபா அந்த வீடியோ காலில் பேசியது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்த ஆபாச வீடியோவை அந்த மாணவி "ஸ்க்ரீன் ஷாட்" எடுத்து ஆதாரமாகவும் கொடுத்திருப்பதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.

குற்றச்சாட்டுக்கு தேவையான ஆதாரம் கிடைத்ததால் முன்கூட்டியே சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments