25 ஆண்டுகளில் ஒரு கோடி கார் தயாரித்த ஹுண்டாய் நிறுவனம்..! சிறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோடியாவது காரின் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக காஞ்சிபுரம் வருகை தரும் அவர்,பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு
சென்று, அங்குள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஒரு கோடி காரை உற்பத்தி செய்துள்ள ஹூண்டாய் பன்னாட்டு தொழிற்சாலைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒரு கோடியாவது காருக்கான உற்பத்தியை துவங்கி வைக்கிறார்.
Comments