டிரோன்களைக் கண்டுபிடித்து வீழ்த்தும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு: டி.ஆர்.டி.ஓ.
டிரோன்களை கண்டுபிடித்து வீழ்த்தக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான DRDO தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
டிரோன் எதிர்ப்புத் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சிறிய டிரோன்களை அழிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
புதிதாக வான் மூலம் உருவான அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவத்திற்கு இது ஆற்றலை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.இதில் உள்ள ராடார் சிஸ்டம் 360 டிகிரி கண்காணிப்பு மூலம் 4 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள மிகச்சிறிய டிரோன்களைக் கூட அடையாளம் காட்டிவிடும்.
மேலும் இதில் உள்ள சென்சர் கருவிகள், ரேடியோ அலைவரிசை போன்றவையும் மிகச்சிறிய வடிவிலான டிரோன்களையும் கண்டுபிடிக்க உதவும் என்றும் சதீஷ் ரெட்டி விளக்கியுள்ளார்.
Comments