டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு கோல்ப் வீராங்கனை அதிதி அசோக்-வட்டு எறிதலில் சீமா பூனியாவும் தகுதி

0 5085

இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

மாநிலங்களுக்கு இடையேயான தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் வட்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அரியானா வீராங்கனை சீமா பூனியா ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற 63 புள்ளி 50 மீட்டர் வீச வேண்டி இருந்த நிலையில் 63 புள்ளி 72 மீட்டர் தூரம் வீசி தன் வாழ்நாள் அதிகபட்சம் மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்தார்.

அதேநேரம் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நட்சத்திர வீராங்கனை ஹீமா தாஸ் விலகி ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிட்டார். ஒலிம்பிக் போட்டிக்குப் தகுதி பெற வீரர் வீராங்கனைகளுக்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவு பெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான கோல்ப் வீராங்கனை தரவரிசை பட்டியலை சர்வதேச கோல்ப் சம்மேளனம் வெளியிட்டு உள்ளது. 60 வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலில் 45-வது இடத்தை பிடித்து பெங்களூருவை சேர்ந்த அதிதி அசோக் 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்திய தரப்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு  தகுதி பெற்ற ஒரே வீராங்கனை அதிதி அசோக் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments