அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

0 1918

இந்தியாவில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு  உதவ அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிறுவனம் 41 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

எதிர்கால மருத்துவப் பயன்பாட்டுக்கு இந்த நிதியைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு, மின்சாரம், நீர்  பாதுகாப்பு, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்ற இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது. இந்தோ பசிபிக், ஆப்கானிஸ்தான் நிலைமை ஆகியவை குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments