ஜம்முவில் டிரோன் தாக்குதல்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

0 3067

ஜம்முவில் டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து,பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு விமான நிலையம் மீது டிரோன் விமானம் மூலம் வெடிகுண்டு வீசி முதன்முதலாக நிகழ்த்தப்பட்ட தாக்குதலையடுத்து எதிர்கால பாதுகாப்பு தொடர்பு பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ஜம்மு தாக்குலில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவுக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இக்கூட்டத்தில் புதிய டிரோன் கொள்கையை அமைப்பது , எதிர்காலத்தில் தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையின் கீழ் முப்படைகளும் புதிய வகைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. செயற்கை அறிவாற்றல் உத்திகளைப் பயன்படுத்துவது குறித்து ராணுவம் ஏற்கனவே பரீட்சார்த்தமான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

ரோபோக்கள், டிரோன்கள், குவாண்டம் கணினி, நேனோ தொழில்நுட்பம் மற்றும் சைபர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நாட்டை பாதுகாப்பது குறித்து விரிவான திட்டங்கள் வகுக்க இக்கூட்டத்தில் முடிவுஎடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments