கூடங்குளத்தில் ரூ.49,621 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும், 5 மற்றும் 6ஆவது அணுஉலைகளின் கட்டுமான பணிகள் தொடங்கியது

0 2627
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6ஆம் அணு உலைகளின் கட்டுமான பணிகள் தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6ஆம் அணு உலைகளின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன.

ரஷ்யா உதவியுடன் கட்டப்பட்ட, தலா 1,000 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அங்கு செயல்பட்டு வருகின்றன. 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள், 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மற்றும் 6ஆம் அணு உலைகளுக்கான கட்டுமான பணி, பூமி பூஜையுடன் தொடங்கியது.

சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும், இந்த இரு அணு உலைகளில், வரும் 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் மின்உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இந்திய அணுசக்தித் துறை தலைவர் கேஎன் வியாஸ், ரஷ்ய அணு சக்தி ஏற்றுமதி கழக இயக்குனர் அலெக்சி லிக்காசெவி உள்ளிட்டோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments