முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் இருந்து, புழல் சிறைக்கு மாற்றப்பட்டது வழக்கமான நடைமுறைதான் -சிறைத்துறை டிஜிபி

0 3227
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் இருந்து, புழல் சிறைக்கு மாற்றப்பட்டது வழக்கமான நடைமுறைதான்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் இருந்து, புழல் சிறைக்கு மாற்றப்பட்டது வழக்கமான நடைமுறைதான் என சிறைத்துறை டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கருக்கலைப்பு செய்ய வைத்ததாக துணை நடிகை அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சில சிறை அதிகாரிகள் உடந்தையோடு, மொபைல் ஏசி யூனிட், சோபா, மொபைல், சார்ஜர் உள்ளிட்ட வசதிகளோடு மணிகண்டன் இருப்பதை கண்டுபிடித்து, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால், வழக்கமான நடைமுறையின் படி தான், மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாகவும், சைதாப்பேட்டை கிளைச் சிறையில் சலுகை வழங்கப்பட்டதாக கூறும் தகவலில் உண்மையில்லை எனவும் சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments