தடுப்பூசி போடுவதில் குளறுபடிகள் : தடுப்பூசி போடாத பலருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக எஸ்எம்எஸ்

0 2553
தடுப்பூசி போடுவதில் குளறுபடிகள் : தடுப்பூசி போடாத பலருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக எஸ்எம்எஸ்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடத் துவங்கிய ஜூன் 21 ஆம் தேதி, சுமார் 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டதாக மத்திய பிரதேச அரசு கூறினாலும் அதில் பல குளறுபடிகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போபாலை சேர்ந்த 13 வயதான  வேதாந்த் டாங்கரே என்ற உடல் ஊனமுற்ற சிறுவனுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை கண்டு அவனது தந்தை அதிர்ச்சி அடைந்தார்.

அதே தினம் சத்னாவில் உள்ள சைனேந்திர பாண்டே என்பவரின் மொபைலில் , அவருக்கு எந்த தொடர்பும் இல்லாத 3 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக செய்தி வந்துள்ளது.

போபாலில் வசிக்கும் நுசாத் சலீம் என்ற 46 வயது பெண்மணி தடுப்பூசியே போடாத நிலையில், அவரது பென்சன் ஆவணங்களின் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டதாக வந்த செய்தியை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது போன்று மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளிலும் குளறுபடி நடந்துள்ள நிலையில், இது குறித்து விசாரிக்கப்படும் என மாநில அமைச்சர் Vishwas Sarang தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments