கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்: ஐரோப்பாவில் அங்கீகாரம் கோரும் சீரம்

0 3186

கோவிஷீல்டு தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி, சீரம் இந்தியா நிறுவனம், ஐரோப்பிய மருந்து முகமையிடம் விண்ணப்பித்துள்ளது.

கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அனுமதி மறுக்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில்,  இந்த விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்வதற்கான டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ் அல்லது தடுப்பூசி பாஸ்போர்ட்டில்  ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியின் Vaxzevria மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு அதில் இடம் பெறவில்லை. இது குறித்து உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக அளவில் பேசி இந்த பிரச்சனையை சரி செய்வதாக அடார் பூனாவாலா ஏற்கனவே டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments